/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு
/
வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு
ADDED : செப் 07, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் :வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., ஜோஸ் தங்கையா நேற்று ஆய்வு செய்தார்.
அதில், குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட விபரம், தண்டனை விபரம், நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்குகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பிறகு, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், எப்.ஐ.ஆர்., நகலை புகார்தாரர்களின் வீடுகளுக்கு சென்று, நேரடியாக வழங்க வேண்டும் என்பது குறித்து, போலீசாருக்கு எஸ்.பி., ஜோஸ் தங்கையா அறிவுரை வழங்கினார்.அப்போது, அரவக்குறிச்சி டி.எஸ்.பி., அப்துல் கபூர், இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், எஸ்.ஐ., சுபாஷினி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.