ADDED : ஆக 08, 2026 06:01 AM

கரூர்:ரேஷன்
கார்டுகளுக்கு கைவிரல் ரேகை, கண் கருவிழி பதிவு செய்ய சிறப்பு முகாம்,
இன்று அந்தந்த ரேஷன் கடைகளில் நடக்கிறது என, கலெக்டர்
முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தேசிய
உணவு பாதுகாப்பு சட்டத்தில், முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா
அன்ன யோஜனா, முன்னுரிமை அற்ற ஆகிய குடும்ப அட்டைகளின் ஆதார்
விபரங்களை சரி பார்ப்பதற்காக, மின்னணு குடும்ப அட்டையில்
இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான
சரிபார்ப்பை மேற்கொள்ளவேண்டும். இதுவரை கைவிரல் ரேகை, கண் கருவிழி
பதிவு செய்யாத பயனாளிகள், பதிவு செய்வதற்கு இன்று, நாளை
(9ம்
தேதி) அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்
நடக்கிறது. கைவிரல் ரேகை, கண்கருவிழி பதிவு செய்யாத ரேஷன் அட்டை
கொண்ட உறுப்பினர்கள், சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
