ADDED : ஜூலை 24, 2026 06:05 AM
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி
அடுத்த, பள்ளப்பட்டி நகராட்சியில் பணிபுரியும் துாய்மை
பணியாளர்களுக்கான, சிறப்பு முகாம் மக்கள் மன்றத்தில் நடந்தது.
கரூர்
மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு கட்டுமான
தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்
மேம்பாட்டு கழகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலன்
மற்றும் மகளிர் உரிமைத்துறை, வீட்டுவசதி, தொழிலாளர் நலத்துறை,
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, வருவாய் சேவை உள்ளிட்ட துறைகளின்
அலுவலர்கள் கலந்து கொண்டு, பல்வேறு அரசு நலத்திட்டங்கள் குறித்து
விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி தி.மு.க.,
எம்.எல்.ஏ., இளங்கோ, பள்ளப்பட்டி நகர்மன்ற தலைவர் முனவர் ஜான்,
நகராட்சி ஆணையர் ஆனந்தகுமார், நகராட்சி பொறியாளர் எஸ்.எஸ்.கார்த்திக்,
வருவாய் ஆய்வாளர் இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில்
நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது
குடும்பத்தினர் என, 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
