/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீரராக்கியத்தில் மக்களுடன் சிறப்பு முகாம்
/
வீரராக்கியத்தில் மக்களுடன் சிறப்பு முகாம்
ADDED : ஆக 07, 2024 07:36 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில், மக்களுடன் சிறப்பு முகாம் வீரராக்கியத்தில் நடந்தது.மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலராஜபுரம், ரெங்கநாதபுரம் ஆகிய இரண்டு பஞ்சாயத்துகளுக்கு, மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கூட்டுறவு துறை கடன் உதவி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி மக்களிடம் இருந்து, மனுக்களை பெற்று கொண்டு தீர்வு காணப்படும் என்றார். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் ரவிராஜா, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன், பாலராஜபுரம், ரெங்கநாதபுரம் பஞ்சாயத்து தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.