/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொய்யாமணி பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
/
பொய்யாமணி பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஆக 02, 2025 01:33 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த பொய்யா மணி சாய்பாபா கோவில் முன், நேற்று காலை 11:00 மணியளவில், தமிழ்நாடு அரசு சமூக தணிக்கை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 2024-25ம் நிதி ஆண்டிற்கான செயல்பாடுகள் குறித்து, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கிராம பெரியவர் மாணிக்கம் தலைமை வகித்தார்.
பொய்யாமணி பஞ்., முன்னாள் தலைவர் பாலன், பஞ்., செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வள அலுவலர் அழகுமுருகன், திட்டத்தின் செயல்பாடுகள், பொதுமக்களின் பயன்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து பேசினார். பஞ்., பணியாளர்களால் பராமரிக்கப்பட்ட பதிவேடுகளை, வட்டார வள அலுவலர் மகேஸ்வரி தலைமையிலான பணியாளர்கள் தணிக்கை செய்து, அதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து பொது மக்களிடம் எடுத்து விளக்கம் அளித்தார்.
சிறப்பு கிராம சபை கூட்டத்தில், 100 நாள் திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.