/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் சிறப்பு குறைதீர் முகாம்
/
முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் சிறப்பு குறைதீர் முகாம்
முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் சிறப்பு குறைதீர் முகாம்
முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் சிறப்பு குறைதீர் முகாம்
ADDED : டிச 01, 2024 01:26 AM
முதன்மை கல்வி அலுவலகத்தில்
ஆசிரியர்கள் சிறப்பு குறைதீர் முகாம்
கரூர், டிச. 1-
தமிழகத்தில், ஆசிரியர்கள் குறைகளை களையும் வகையில், முதன் முதலாக பள்ளிக்கல்வித்துறை சார்பில், சிறப்பு குறைதீர் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் குறைகளை முகாமில் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உடனடியாக களைவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம் தலைமையில், சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.
ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், 40 பேருக்கு பணிவரன் முறை மற்றும் தகுதிகாண் பருவ ஆணை வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பக்தவச்சலம், நேர்முக உதவியாளர் சக்திவேல், உதவி திட்ட அலுவலர் சிவராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.