/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உள்ளூர் 'டிவி' சேனல் உரிமையாளர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை
/
உள்ளூர் 'டிவி' சேனல் உரிமையாளர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை
உள்ளூர் 'டிவி' சேனல் உரிமையாளர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை
உள்ளூர் 'டிவி' சேனல் உரிமையாளர்களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை
ADDED : அக் 09, 2025 01:36 AM
கரூர், கரூரில், உள்ளூர் 'டிவி' சேனல் உரிமையாளர்களிடம், த.வெ.க., பிரசார கூட்டம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல், த.வெ.க., பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூரை சேர்ந்த, 10 உள்ளூர் சேனல் உரிமையாளர்களை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, 10 பேரும் ஐ.ஜி., அஸ்ரா கார்க் முன் நேற்று காலை, 11:00 மணிக்கு ஆஜராகினர்.
பிறகு அவர்களிடம், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, த.வெ.க., கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா, விளம்பரம் தரப்பட்டதா, கூட்டத்துக்கு உறவினர்களை அழைத்து சென்றீர்களா, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதா என, பல்வேறு கேள்விகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் கேட்டுள்ளனர்.
மேலும், த.வெ.க., கூட்டத்துக்கு ஒளிபரப்புக்கு சென்றிருந்தால், அதனுடைய வீடியோ தொகுப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவிடம் (நாளை) இன்று ஒப்படைக்க வேண்டும் என, உள்ளூர் கேபிள் 'டிவி' உரிமையாளர்களுக்கு, சிறப்பு புலனாய்வு குழுவினர் அறிவுறுத்தினர். இதையடுத்து 10 பேரும் மதியம், 12:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டனர்.