/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
20ல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்
/
20ல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்
20ல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்
20ல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்
ADDED : மே 18, 2025 06:50 AM
குளித்தலை: குளித்தலையில், வரும் 20ல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, போலீசார் தலைமையில் சிறப்பு கூட்டம் நடந்தது.
குளித்தலை, மகா மாரியம்மன் கோவில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 4ல் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.
அப்போது விழாவில் ஏற்பட்ட பிரச்னையில், பிளஸ் 2 மாணவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குளித்தலை போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர்.
வரும், 20ல் மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா நடைபெறு-கிறது. இந்நிலையில் திருவிழா அமைதியான முறையில் நடை-பெற, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இந்துமதி தலை-மையில் சிறப்பு கூட்டம் நடந்தது. குளித்தலை டி.எஸ்.பி., செந்-தில்குமார், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தேர் திருவிழாவின் போது, கோவிலுக்கு பாத்தியப்பட்ட கிராம மக்கள், சமுதாய அடையாளத்தின் உடைகளை அணிந்து வரக்கூ-டாது. பொது அமைதிக்கு சீர் குலைக்கும் செயல்களில் எவரும் ஈடு படக்கூடாது.
சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்ப-டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் விழாவில் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் மற்றும் பாது-காப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்-டது. குளித்தலை இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்.ஐ., சரவண-கிரி, குற்ற பிரிவு எஸ்.ஐ.,
குமரவேல், மண்டல துணை தாசில்தார் நீதிராஜன், குளித்தலை வருவாய் ஆய்வாளர் தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.