/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சித்திரை அமாவாசையையொட்டி கி.புரம் கோவில்களில் சிறப்பு பூஜை
/
சித்திரை அமாவாசையையொட்டி கி.புரம் கோவில்களில் சிறப்பு பூஜை
சித்திரை அமாவாசையையொட்டி கி.புரம் கோவில்களில் சிறப்பு பூஜை
சித்திரை அமாவாசையையொட்டி கி.புரம் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : ஏப் 28, 2025 07:35 AM
கிருஷ்ணராயபுரம்: சித்திரை அமாவாசையையொட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்து சிந்தலவாடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று, சித்திரை அமாவாசையையொட்டி, மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பலரசம், மஞ்சள், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. சிந்தலவாடி சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.* கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி கரையில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. அமாவாசையையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம் செய்து மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. மாயனுார், திருக்காம்புலியூர், லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.