/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆயுத பூஜையையொட்டி கோவில்கள்;வர்த்தக நிறுவனங்களில் சிறப்பு பூஜை
/
ஆயுத பூஜையையொட்டி கோவில்கள்;வர்த்தக நிறுவனங்களில் சிறப்பு பூஜை
ஆயுத பூஜையையொட்டி கோவில்கள்;வர்த்தக நிறுவனங்களில் சிறப்பு பூஜை
ஆயுத பூஜையையொட்டி கோவில்கள்;வர்த்தக நிறுவனங்களில் சிறப்பு பூஜை
ADDED : அக் 02, 2025 01:09 AM
கரூர்:ஆயுத பூஜையையொட்டி, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. வர்த்தக நிறுவனங்களிலும், ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.
ஹிந்துக்களின் முக்கிய திருவிழாவான ஆயுத பூஜை விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும், வியாபாரம் மெல்ல மெல்ல சூடுபிடித்துள்ளது. தொழில் நகரான கரூரில் நேற்று ஆயுத பூஜையையொட்டி, ஜவுளி நிறுவனம், கொசுவலை நிறுவனம் மற்றும் பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள், ஆட்டோ ஸ்டாண்ட், வேன் ஸ்டாண்டுகளிலும் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.
மேலும், அரசு அலுவலகங்கள், தீயணைப்பு நிலையம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களிலும் ஆடம்பரம் இல்லாமல், நடப்பாண்டு ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டது. மேலும், ஆயுத பூஜை விழாவையொட்டி கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவில், சின்ன ஆண்டாங்கோவில் அங்காளம்மன் கோவில் உள்ளிட்ட, பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
* ஆயுத பூஜையையொட்டி, கரூரில் ரயில்வே தண்டவாளம், மைல் கல்லுக்கு பூஜை போடப்பட்டது. நாடு முழுவதும் நேற்று ஆயுதபூஜையை யொட்டி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் பூஜை போடப்பட்டது. இந்நிலையில், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாளங்களுக்கு, பொறியியல் துறை ஊழியர்கள், ரயில்வே நிலைய ஊழியர்கள் பூஜை போட்டு வழிபட்டனர்.
அதேபோல், நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சார்பில், கரூர்-நெரூர் சாலையில் உள்ள, மைல் கல்லுக்கு பூஜை போடப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
* கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சார்பில், ஆயுத பூஜையை முன்னிட்டு அலுவலகத்தை துாய்மை செய்து, கணக்கு புத்தகங்கள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. துாய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கபட்டது. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி, செயல்அலுவலர் கிருஷ்ணன், கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலகத்தில், வாகனங்கள் சுத்தப்படுத்தப்பட்டு குங்குமம், மஞ்சள் வைக்கப்பட்டது. தொடர்ந்து அலுவலக வளாகத்ததில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.