/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் வழியாக சிறப்பு கோடைகால ரயில்கள்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
கரூர் வழியாக சிறப்பு கோடைகால ரயில்கள்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர் வழியாக சிறப்பு கோடைகால ரயில்கள்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கரூர் வழியாக சிறப்பு கோடைகால ரயில்கள்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 21, 2025 06:51 AM
கரூர்: கோடைகாலம் நெருங்குவதையொட்டி, கரூர் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்-றனர்.
கரூரில் இருந்து, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் சேலத்-துக்கு ரயில்வே வழித்தடம் உள்ளது. ஆனால், கரூர் வழியாக அதிக ரயில்கள் இயக்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக இயக்கப்படும் ரயில்கள்தான் செல்கிறது. கடந்த சில மாதங்களாக மதுரையில் இருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு, கரூர், சேலம் வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் புதிதாக இயக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில், உள்ள ஜவுளி நிறு-வனங்கள், சாயப்பட்டறைகள்,
கொசுவலை உற்பத்தி நிறுவ-னங்கள் மற்றும் பஸ் பாடி கட்டும் நிறுவனங்களில், தென் மாவட்-டங்களை சேர்ந்தவர்கள், ஆயிரக்கணக்கில் பணிபுரிகின்றனர். அதே போல் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் பெங்களூரு, திருப்பூர், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் படிக்கின்றனர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும்,
பஸ்களை நம்பியே உள்-ளனர். தற்போது பஸ் கட்டணத்தை விட, ரயிலில் கட்டணம் குறைவாக உள்ளது. இதனால், ரயிலில் பயணம் செய் யும் பொது-மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொதுத்-தேர்வுகள்
முடிந்த பிறகு, வரும் மார்ச் மாதம் இறுதியில், கோடைவிடுமுறை விடப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்களில் உட்கார இடம் இல்லாமல், நீண்ட துார பயணத்துக்கு நின்று கொண்டு செல்ல முடியாது. இதனால், கரூர்
வழியாக கோடை காலத்தையொட்டி, சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என, கரூர் மாவட்டத்தை சேர்ந்த, பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

