ADDED : ஜன 09, 2025 07:50 AM
அ நிறம் | அளவு
சேலம்: சபரிமலை மகர விளக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: திருவ-னந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரயில் வரும், 15 அதிகாலை, 4:25க்கு புறப்பட்டு அதே நாள் இரவு, 11:00 மணிக்கு, சென்-னையை அடையும். இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே செல்லும். மறுமார்க்க ரயில் வரும், 16 காலை, 1:00 மணிக்கு, சென்னையில் புறப்பட்டு, அதே நாள் இரவு, 8:00 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும்.
அதேபோல் எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் ரயில் வரும், 16 மாலை, 6:15க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 8:30க்கு சென்-னையை அடையும். மறுமார்க்க ரயில் வரும், 17 காலை, 10:30 மணிக்கு சென்னையில் புறப்பட்டு அதே நாள் இரவு, 11:00 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும்.
