ADDED : டிச 26, 2025 05:20 AM
கரூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாம் நாளை (27) நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்-துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், சிறப்பு வாக்காளர் திருத்தம் பணிகளை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் ஆட்சேபனை மற்றும் உரிமை கோரல் வரும் ஜன.,18 வரை தெரிவிக்கலாம். அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்காக நாளை, நாளை மறுநாள் (27, 28ம் தேதி), ஜன., 3, 4 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடக்-கின்றன.
இங்கு விண்ணப்ப படிவம் கொடுக்கலாம் அல்லது https://voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக, பரிசீலனை செய்யப்பட்டு சேர்க்கப்பட்ட பின், பிப்., 17ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெயிடப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

