/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அக்.,18ல் பள்ளி,கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
/
அக்.,18ல் பள்ளி,கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
அக்.,18ல் பள்ளி,கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
அக்.,18ல் பள்ளி,கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
ADDED : அக் 09, 2024 12:58 AM
அக்.,18ல் பள்ளி,கல்லுாரி
மாணவர்களுக்கு பேச்சு போட்டி
கரூர், அக். 9--
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி வரும், 18ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை முன்னிட்டு அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு தனித்
தனியே பேச்சுப்போட்டி, கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லாரியில் வரும், 18ல் நடக்கிறது. கல்லுாரி மாணவர்கள், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை, 9:30 மணிக்கு நடக்கிறது.மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன், கல்லுாரி கல்வி இணை இயக்குனர் வழியாகவும், பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியாகவும் பேச்சு போட்டியில் பங்கேற்கலாம். மேலும் விபரம் பெற, கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்திலுள்ள, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி- 04324- 255077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.