/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கார்வாழி அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்
/
கார்வாழி அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்
கார்வாழி அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்
கார்வாழி அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்
ADDED : நவ 02, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, கார்வாழி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, ஆபத்தான வளைவில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க, வேகத்தடை அமைக்க வேண்டும்.
க.பரமத்தி ஒன்றியம், கார்வாழி கடைவீதியில் இருந்து குப்பகவுண்டன்வலசு செல்லும் நெடுஞ்சாலையில், அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ஆபத்தான வளைவு உள்ளது. இதன் வழியாக அத்திபாளையம் முதல் குப்பகவுண்டன்வலசு மற்றும் பல்வேறு ஊர்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. சில நேரங்களில், பள்ளி அருகே ஆபத்தான வளைவில் வாகனங்கள் விபத்துகளில் சிக்கி விடுகின்றன. எனவே, இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்க, வேகத்தடை அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.