/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராமானுார் வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்
/
ராமானுார் வளைவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்
ADDED : செப் 13, 2024 06:47 AM
கரூர்: கரூர், ராமானூர் வளைவு சாலை பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர்-, திருச்சி சாலையில் தெரசா கார்னர் பகுதியில் இருந்து ராமானுார், பசுபதிபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ராமானுார், கொளந்தானுார் சாலையில் சென்று வருகிறது. கரூரில் இருந்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்பவர்களும், இந்த சாலையில் செல்கின்றனர். கொளந்தானுார் ராமானுார் இடையே வளைவு பாதை உள்ளது. மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி வாகன விபத்துக்களும் நடக்கிறது.
இந்த பகுதி அருகிலேயே டாஸ்மாக் கடையும் செயல்படுவதால், வாகன ஓட்டிகள் வளைவு பாதையை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், வளைவு பாதையோரம் பேரிகார்டு அல்லது வேகத்தடை அமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

