/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டு போட்டி
/
புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டு போட்டி
ADDED : டிச 31, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, அரவக்குறிச்சி வடக்கு தெருவில் உள்ள இளைஞர்கள், எட்டாம் ஆண்டாக விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.
அரவக்குறிச்சி வடக்கு தெருவில், 50-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு ஆண்டு தோறும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் எட்டாம் ஆண்டாக, வடக்கு தெரு இளைஞர்கள் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்றனர். அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டு, உணவு அளிக்கப்பட்டது.