/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பொங்கல் விழாவை முன்னிட்டு 355 இடங்களில் விளையாட்டு போட்டி
/
பொங்கல் விழாவை முன்னிட்டு 355 இடங்களில் விளையாட்டு போட்டி
பொங்கல் விழாவை முன்னிட்டு 355 இடங்களில் விளையாட்டு போட்டி
பொங்கல் விழாவை முன்னிட்டு 355 இடங்களில் விளையாட்டு போட்டி
ADDED : ஜன 16, 2025 07:10 AM
கரூர்: பொங்கல் திருவிழாவையொட்டி, கரூர் மாவட்டத்தில், 355க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இரண்டாவது நாளாக நேற்றும், பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் கடந்த, 13 முதல் பொங்கல் விழா நடந்து வருகிறது. நேற்று மாட்டு பொங்கல் என்பதால், கால்நடைகளை குளிப்பாட்டி, பொட்டு வைத்து, பொங்கலிட்டு விழாவை விவசாயிகள் கொண்டாடினர். நேற்று, 355க்கும் மேற்பட்ட இடங் களில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. அதிகபட்சமாக குளித்தலையில், 65, வேலாயுதம்பாளையத்தில், 50 இடங்களில் சிறுவர், சிறுமிகளுக்கான போட்டி நடந்தது. வெங்கமேட்டில், 37, வாங்கல், 43, தான்தோன்றிமலை, 20, சின்னதாராபுரம், 25, தென்னிலை, 9, க.பரமத்தி 20, வெள்ளியணை, 12, மாயனுார், 20, லாலாப்பேட்டை, 25, பாலவிடுதி, 19, சிந்தாமணிப்பட்டி, 10, ஆகிய இடங்களில் பல்வேறு போட்டிகள் நடந்தன.
கரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் கபடி போட்டி, தலா ஒரு இடத்தில் வாலிபால், கிரிக்கெட் போட்டி நடந்தது. திருச்சி, மதுரை மாவட்டங்களுக்கு சுற்றுலா சென்ற பொதுமக்கள், கரூரில் எதிர்பார்த்த உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.