/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் சுற்றித்திரிந்த புள்ளி மான் மீட்பு
/
கரூரில் சுற்றித்திரிந்த புள்ளி மான் மீட்பு
ADDED : அக் 29, 2025 01:20 AM
கரூர், கரூரில் சுற்றித்திரிந்த புள்ளி மானை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கரூர், காமராஜபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில், நேற்று காலை ஆண் புள்ளி மான் ஒன்று சுற்றித்திரிவதாக, அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், புள்ளி மானை பிடிக்க முயன்றனர்.
அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிய புள்ளி மான், அந்த பகுதியில் உள்ள டைலரிங் செட்டில் புகுந்து கொண்டது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரம் போராடி புள்ளி மானை பிடித்து, கால் மற்றும் கண்களை கட்டி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

