/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எள் செடிகளை பாதுகாக்க மருந்து தெளிப்பு பணி
/
எள் செடிகளை பாதுகாக்க மருந்து தெளிப்பு பணி
ADDED : செப் 30, 2025 01:32 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மானாவாரி எள் செடிகளில் பரவி வரும் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க, மருந்து தெளிப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார், சரவணபுரம், பாப்பகாப்பட்டி, சிவாயம், புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், வேங்காம்பட்டி, கோடங்கிப்பட்டி, கணக்கம்பட்டி, மத்திப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் பரவலாக மானாவாரி நிலங்களில் எள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. களைகள் அகற்றப்பட்டதால், எள் செடிகள் வளர்ந்து வருகிறது. பூக்களில் பூச்சி தாக்குதல் இருப்பதால் மகசூல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
இதை தடுக்கும் வகையில், விவசாயிகள் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக இயற்கை முறையில் மருந்து தெளிப்பு பணி நடக்கிறது. இந்த பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில், 100 ஏக்கர் பரப்பளவில் எள் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது.