/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் மழை குகை வழிப்பாதையில் தேங்கிய மழைநீர்
/
கரூர் மாவட்டத்தில் மழை குகை வழிப்பாதையில் தேங்கிய மழைநீர்
கரூர் மாவட்டத்தில் மழை குகை வழிப்பாதையில் தேங்கிய மழைநீர்
கரூர் மாவட்டத்தில் மழை குகை வழிப்பாதையில் தேங்கிய மழைநீர்
ADDED : மே 11, 2024 11:20 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. சணப்பிரட்டியில் ரயில்வே குகை வழிப்பாதையில், மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
தமிழகத்தில், கரூர் மாவட்டத்தில் கடந்த, 15 நாட்களாக அதிக பட்சமாக, 110 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. கடந்த, 4 ல் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், 5 ல் இரவு கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. நேற்று அதிகாலை வரை, கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் மழை பெய்தது.
சணப்பிரட்டி ரயில்வே குகை வழிப்பாதையில் மழைநீர் தேங்கியது. சணப்பிரட்டியில் இருந்து, கரூர் நகருக்கு வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.மழை விபரம் (மி.மீ.,) கரூர், 1, அரவக்குறிச்சி, 4.2, க.பரமத்தி, 2.8, அணைப் பாளையம், 13.4 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் சராசரியாக, 1.78 மி.மீ., மழை பதிவானது.