/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக படிக்கட்டுகள் அமைப்பு
/
மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக படிக்கட்டுகள் அமைப்பு
மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக படிக்கட்டுகள் அமைப்பு
மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக படிக்கட்டுகள் அமைப்பு
ADDED : மே 12, 2024 07:34 AM
கரூர் : கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழாவையொட்டி, பக்தர்கள் வசதிக்காக தற்காலிகமாக, படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
கரூர் மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா, இன்று கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து, நாள்தோறும் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றுதல், அங்கபிரதட்சணம் செய்தல் உள்ளிட்ட வழிபாடு முறைகள் காலை, 7:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை நடக்கும். மேலும், நாள்தோறும் உற்சவர் சுவாமி, பல்வேறு சிறப்பு வாகனங்களில் திருவீதி உலாவும் நடக்க உள்ளது.
இந்நிலையில், கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வர துவங்கியுள்ளதால், நுழைவு வாயிலில், நெரிசலை தவிர்க்க இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், கருவறைக்கு செல்லும் பக்தர்கள், படிக்கட்டுகள் வழியாகவும், கோவிலில் இருந்து வெளியே செல்லும் பக்தர்கள், படிக்கட்டின் கீழ் பகுதியிலும், நெரிசலில் சிக்காமல் எளிதாக நடந்து செல்லலாம்.
மேலும், அங்கபிரதட்சணம் செய்யும் பக்தர்கள், சிக்கல் இல்லாமல் நேர்த்திகடன் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் எந்தவிதமான தடையும் இல்லாமல், வரிசையில் நின்று கரூர் மாரியம்மன் கோவிலில் சுவாமி வழிபாடு செய்ய முடியும்.
அமராவதி ஆற்றங்கரை 'பளிச்'
கரூர் அருகே பசுபதிபாளையம் அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில், இன்று மாலை, 6:00 மணிக்கு, கம்பத்துக்கு பூஜை செய்து மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வல மாக எடுத்து செல்லப்படுகிறது. அதற்காக, நேற்று காலை அமராவதி ஆற்றுப்பகுதியில் உள்ள, குப்பை அகற்றும் பணி நடந்தது. கரையோர பகுதிகள் குப்பையின்றி பளிச்சென்றிருந்தது.