/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 4,287 பேருக்கு பரிசோதனை
/
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 4,287 பேருக்கு பரிசோதனை
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 4,287 பேருக்கு பரிசோதனை
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 4,287 பேருக்கு பரிசோதனை
ADDED : செப் 07, 2025 01:17 AM
கரூர், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம், 4,287 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரூர் அருகே, வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்த பின் கூறியதாவது: முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம், குழந்தைகள் நலம், நுரையீரல் சிறப்பு மருத்துவம், தோல், பல், கண் சிறப்பு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் உள்பட, 17 மருத்துவ சிகிச்சைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட உள்ளது. அனைத்து சிகிச்சைகளும், பரிசோதனைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது.
முகாம்களின் மூலம் இதுவரை, 1,698 ஆண்கள், 2,589 பெண்கள் என மொத்தம், 4,287 பேர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, 10 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், காசநோயால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.