/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கரூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : அக் 08, 2025 01:34 AM
கரூர்,கரூர் மாவட்டத்தில் இன்று, 'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்' நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடக்கிறது.
அதில், க.பரமத்தி வட்டாரம், எலவனுார், ராஜபுரம், தொக்குப்பட்டி ஆகிய பஞ்.,களுக்கு, எல்லமேடு வி.கே.டி., மண்டபத்திலும், கரூர் மாநகராட்சி, 27வது வார்டு, எம்.ஜி. ரோடு சின்ன கொங்கு மண்டபத்திலும், கிருஷ்ணராயபுரம் வட்டாரம், கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கினம் ஆகிய பஞ்.,களுக்கு, கொசூர் சமுதாய கூடத்திலும், தோகைமலை வட்டாரம் பாதிரிப்பட்டி, பொருந்தளுர் ஆகிய பஞ்.,களுக்கு பாதிரிப்பட்டி வி.பி.ஆர்.சி., கட்டிடத்திலும் முகாம் நடக்கிறது. இங்கு, பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.