/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
கரூரில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : ஜூலை 29, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூரில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடக்கிறது.
கரூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் இன்று (29ம் தேதி) கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாசவி மஹாலில், வார்டு எண், 11, 20க்கும், பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட
டி.ஏ.எம், நகர், சுல்தார் ஹபிபுல்லா மஹாலில் வார்டு எண்-3, 4, 5, 6,7க்கும், புகழூர் நகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ். சாலையில் காந்தி யார் மண்டபத்தில் வார்டு எண்-3,4,6-க்கும் முகாம் நடக்கிறது. இந்த இடங்களில், தங்களது கோரிக்கை தொடர்பாக மக்கள் மனுக்களை கொடுக்கலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.