ADDED : ஆக 24, 2025 01:29 AM
கிருஷ்ணராயபுரம், பழையஜெயங்கொண்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
டவுன் பஞ்சாயத்து தலைவர் சவுந்தரபிரியா தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். வருவாய், மின்சாரம், கூட்டுறவு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, உள்ளிட்ட, 13 துறைகளில் இருந்து, 45 சேவைகளுக்கு மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று, அதற்கான தீர்வு காணும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். முகாமில் 240க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பிரபாகரன், தனி பிரிவு தாசில்தார் வித்யாவதி, கிருஷ்ணராயபுரம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலர் ரவிராஜா, பழையஜெயங்கொண்டம் நகர செயலர் மோகன்ராஜ், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

