/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
/
பள்ளப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
பள்ளப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
பள்ளப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
ADDED : ஆக 31, 2025 04:37 AM
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டியில்,
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் வட மாநில தொழிலாளர்கள், பொதுமக்கள் என
ஏராளமானோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
கரூர்
மாவட்டத்தில், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் ஒரு வட்டாரத்திற்கு, 3
முகாம் வீதம் மொத்தம், 24 முகாம்களும், மாநகராட்சியில், 3 என மொத்தம்,
27 முகாம் பிப்ரவரி 2026 வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு
சனிக்கிழமையும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும்
ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட கலெக் டர் தங்கவேல் தலைமையில் நடந்தது.
அரவக்குறிச்சி
எம்.எல்.ஏ., இளங்கோ முகாமை பார்வையிட்டார். பொது மருத்துவம், பொது
அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, பேறு கால மருத்துவம், குழந்தைகள் நலம்,
இதய நலம், நரம்பியல், நுரையீரல், நீரழிவு, தோல், பல், கண், காது,
மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை மருத்துவம், சித்த மருத்துவம்,
உணவியல் மருத்துவம் ஆகிய, 17 சிகிச்சைகள் சிறப்பு மருத்துவ
நிபுணர்களால் வழங்கப்பட்டது.
பள்ளப்பட்டி நகர மன்ற தலைவர் முனவர் ஜான், தி.மு.க., நகர பொறுப்பாளர் வசீம் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

