/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருச்சாப்பூரில் உங்களுடன்ஸ்டாலின் திட்ட முகம்
/
திருச்சாப்பூரில் உங்களுடன்ஸ்டாலின் திட்ட முகம்
ADDED : அக் 02, 2025 01:36 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த பொய்யாமணி பஞ்., திருச்சாப்பூர் யூனியன் நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
குளித்தலை யூனியன் கமிஷனர் சுந்தர பாண்டின் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட பஞ்., குழு துணைத் தலைவர் தேன்மொழி தியாகராஜன், முன்னாள் பஞ்., தலைவர் ராஜேந்திரன், குளித்தலை ஒன்றிய செயலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார் நீதிராஜன், தனி தாசில்தார் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அரசு திட்டங்கள் குறித்து பேசினர். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, குளித்தலை தி.மு.க., எம்.எல்.ஏ., மாணிக்கம் பேசினார்.அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.