தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ உடல் உறுப்புகள் தானம்மாணவனுக்கு அரசு மரியாதை

உடல் உறுப்புகள் தானம்மாணவனுக்கு அரசு மரியாதை

உடல் உறுப்புகள் தானம்மாணவனுக்கு அரசு மரியாதை


ADDED : மே 20, 2026 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 04:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளித்தலை :குளித்தலை நகராட்சியின் வரி ஆய்வாளர் ராஜசேகரன், 52; இவரது மகன் கோகுல்ராஜ், 19. இவர், திருச்சி தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த, 17 மதியம், தந்தைக்கு சொந்தமான டூவீலரில், சுங்ககேட்டில் உள்ள கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன், கோட்டைமேடு பகுதியை சேர்ந்த விஜயகுமார், 29, என்பவர், 'பல்சர்' பைக்கில், நாப்பாளையம் பகுதியை சேர்ந்த கிஷோர், 25, என்பவரை அமர வைத்துக்கொண்டு அதிவேகமாக சென்று, கோகுல்ராஜ் ஓட்டிவந்த டூவீலர் மீது மோதினார்.

இதில் கோகுல் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக, பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவனின், 2 கிட்னி, 2 கண்கள், 2 கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானத்திற்காக எடுக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று மதியம், கோகுல் உடலுக்கு குளித்தலை தாசில்தார் இந்துமதி தலைமையில் தனி தாசில்தார்கள் நீதிராஜன், ஜெயவேல்காந்தன், வி.ஏ.ஓ.,க்கள் முத்துக்குமார், குமரகுரு உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செய்தனர். தொடர்ந்து குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us