ADDED : செப் 11, 2026 06:50 AM
அரவக்குறிச்சி:பள்ளபட்டி மேல்நிலைப்பள்ளி மாணவி, மாநில அளவிலான கேரம் போட்டிக்கு தகுதி பெற்றார்.
கரூர்
மாவட்ட அளவிலான, முதல்வர் கோப்பைக்கான கேரம் போட்டி, பரணி பார்க்
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில், கரூர்
மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட
மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பள்ளபட்டி
மேல்நிலைப்பள்ளி மாணவி ஹர்ஷினி பிரியா, 5 ரவுண்டு விளையாடி முதலிடம்
பிடித்தார். சிறப்பு பரிசாக, 3,000 ரூபாய் பெற்றார். மேலும், மாநில அளவில்
நடைபெறும் முதல்வர் கோப்பை போட்டிக்கு, இம்மாணவி கரூர்
மாவட்டத்திலிருந்து தேர்வு பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற மாணவியை
பள்ளி தாளாளர் மற்றும் பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் முதன்மை உதவி
செயலாளர், உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், உதவித் தலைமை
ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
