/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாய ஆலைகளுக்கு ஆற்றில் இருந்து தண்ணீர் திருட்டு
/
சாய ஆலைகளுக்கு ஆற்றில் இருந்து தண்ணீர் திருட்டு
ADDED : மார் 17, 2024 02:41 PM
பள்ளிப்பாளையம்: சமயசங்கிலி பகுதியில், ஆற்றில் இருந்து சாய ஆலைகள், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் திருட்டு நடந்து வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம், சமயசங்கிலி பகுதியில் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், சாய ஆலைகள், தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆற்றுப்பகுதியில் மறைவான இடத்தில் ரகசியமாக மோட்டார் வைத்து ஆற்றிலிருந்து தண்ணீரை உறிஞ்சி வருகின்றனர். பல இடங்களில், விவசாயத்துக்கு எனக்கூறி பகல், இரவு என பாராமல் ஆற்றில் இருந்து தொடர்ந்து தண்ணீரை எடுத்து சாய ஆலைகள், தொழிற்சாலைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, ஆற்றில் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் வருகிறது. கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதால் தண்ணீர் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, ஆற்றில் தண்ணீர் திருட்டு தடுக்க கண்காணிப்பு குழு அமைத்து, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

