/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பனை, தென்னை மரங்களை ஊக்குவிக்க நடவடிக்கை தேவை
/
பனை, தென்னை மரங்களை ஊக்குவிக்க நடவடிக்கை தேவை
ADDED : நவ 03, 2024 02:18 AM
கரூர்: தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், கரும்புக்கு மாற்றாக தென்னை, பனை மரங்கள் வளர்ப்பை அரசு ஊக்குவிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நாட்டில், 50 கோடி பனை மரங்கள் இருந்தன. அப்போது, ஆங்கிலேயர் தயாரிப்பான மது வகைகளின் விற்பனையை ஊக்குவிக்க, பனை, தென்னை மரங்-களில் கள் இறக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால், பனை மரங்களை பராமரிக்கும் பணிகள் நின்று போனது.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழகத்தில் கள்ளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள, ஐந்து கோடி பனை மரங்களில், இரண்டரை கோடி பனை மரங்கள் அழிந்து விட்டது. மீதமுள்ள பனை மரங்கள் அழியும் விளிம்பில் உள்ளது.ஒரு கிலோ வெள்ளை சர்க்கரை, 55 ரூபாய்க்கு விற்பனை செய்-யப்படும் நிலையில், பனங்கற்கண்டு, 400 முதல், 550 ரூபாய் வரையிலும், கருப்பட்டி, 350 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தமிழகத்தில் பனை மரங்களின் உற்-பத்தியை காக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவ-சாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மதுபான தயாரிப்புக்காக, கரும்பு சாகுபடி ஊக்குவிக்கப்பட்டது. தண்ணீர் பயிரான கரும்பு மூலம், தயாரிக்கப்படும் வெள்ளை சர்க்கரை, மெல்ல மெல்ல கொல்லும் விஷமாகும். ஆனால், பனை மூலம் தயாரிக்கப்படும் கருப்பட்டி உடல் நலத்துக்கு ஏற்றது.
இனிப்பு சுவைக்காக, வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்-டியை மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதனால், கருப்-பட்டி விலை உயர்ந்து விட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்ப-டுத்தி, தமிழக அரசு பனை மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பனை மரத்தை வெட்டினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதே போல் நடவடிக்கையை தமிழகத்திலும் எடுக்க வேண்டும். வறட்சியான காலக்கட்டத்தில், கரும்புக்கு பதிலாக, தென்னையை சாகுபடியை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், புளிக்காத பனை மரத்து கள்ளில் (நீரா) இருந்து தயாரிக்கப்படும் வெர்டினா சுகருக்கு, வெளிநாட்டில் நல்ல மவுசு உண்டு.
தனியார் சர்க்கரை ஆலைகள் பல கோடி ரூபாய் நிலுவை தொகையை, விவசாயிகளுக்கு தராமல் உள்ளது. இதனால், பனை மரங்கள் மூலம் கிடைக்கும் பொருட்கள், விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். தென்னை மரங்களை சொட்டு நீர் மூலம் காப்பாற்றி வருகிறோம். தமிழகத்தில் பனை, தென்னை நல வாரி-யங்களின் செயல்பாடு முடங்கி உள்ளது. இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை தேவை.
இவ்வாறு கூறினர்.