தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ க.பரமத்தி பகுதியில் துாய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை: அ.தி.மு.க., வேட்பாளர் செல்வகுமார்

க.பரமத்தி பகுதியில் துாய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை: அ.தி.மு.க., வேட்பாளர் செல்வகுமார்

க.பரமத்தி பகுதியில் துாய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை: அ.தி.மு.க., வேட்பாளர் செல்வகுமார்


ADDED : ஏப் 18, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி : ''க.பரமத்தி பஞ்., யூனியன் பகுதிகளில், துாய்மையான குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அரவக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர்

செல்வகுமார் பேசினார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் செல்வ குமார் க.பரமத்தி ஒன்றிய வடக்கு பகுதியில், அத்திப்பாளையம், முனனுார், துக்காச்சி ஆகிய கிராம பஞ்சாயத்துக்களில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது:

விவசாய குடும்பத்தை சேர்ந்த இ.பி.எஸ்., குடிமராமத்து திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் ஏரி, குளம், வாய்க்கால்களை துாய்மைபடுத்தி, விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தவர். பெண்களின் முன்னேற்றத்துக்காக, முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஆடு, பசு மாடு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இ.பி.எஸ்., நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதை தி.மு. க., அரசு நிறுத்தி விட்டது. இதுபோன்ற திட்டங்கள் மீண்டும் வர, அ.தி.மு.க.,வை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குடும்ப அட்டைதாரர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய், பிரிட்ஜ், ஆண்டுக்கு மூன்று காஸ் சிலிண்டர் என, தமிழக மக்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், வாக்குறுதிகள் அனைத்தும் அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன்.

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட, க.பரமத்தி பஞ்., யூனியன் பகுதிகளில் உள்ள, அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும், தரமான தார்ச்சாலை அமைக்கப்படும். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம், துாய்மையான குடிநீர் வழங்கப்படும். மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ள அரவக்குறிச்சி தொகுதியில், விவசாய துறை சார்ந்த திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். புகழூர் காவிரியாற்றில், அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்ட கதவணை பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

பிறகு, வல்லாகுளத்துப்பாளையம், செல்வ நகர், மேட்டுகடை, வளையாப்பாளையம், புதுார், காந்தி நகர், அத்திப்பாளையம், இந்திரா நகர், சாமிநாதபுரம், மோளப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர் செல்வகுமார், பொதுமக்களை சந்தித்து ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us