/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில் புதிய பாடப்பிரிவு தொடங்க நடவடிக்கை'
/
'தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில் புதிய பாடப்பிரிவு தொடங்க நடவடிக்கை'
'தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில் புதிய பாடப்பிரிவு தொடங்க நடவடிக்கை'
'தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில் புதிய பாடப்பிரிவு தொடங்க நடவடிக்கை'
ADDED : பிப் 10, 2025 07:14 AM
கரூர்: ''கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லுாரியில் புதிய பாடப்பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லுாரியில், கல்லுாரி கனவுகளின் கலை சங்கமம் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் மாணவ, மாணவியரை உயர்ந்த நிலைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 'நான் முதல்வன்' என்ற திட்டம், முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமாகும். பல இளைஞர்கள் பயன்படக்கூடிய வகையில் திட்டத்தை வடிவமைத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
கல்வி அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த கல்லுாரியில் புதிய அரங்கம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை விரைவில் நிறைவேற்றி தரப்படும். மேலும், இக்கல்லுாரியில் கூடுதலாக புதிய பாடப்பிரிவு தொடங்க வேண்டும் என கேட்டுள்ளனர். இக்கல்லுாரியில் எந்தெந்த பாடப்பிரிவுகள் தேவைப்படும் என்ற பட்டியல் அளித்தால், அவை முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, அவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். துணை முதல்வர் உதயநிதி, இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, துணை மேயர் தரணி சரவணன், மண்டல தலைவர் ராஜா, சக்திவேல் உள்ளபட பலர் பங்கேற்றனர்.

