/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை
/
சிந்தலவாடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை
ADDED : அக் 08, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து பழைய நெடுஞ்சாலை அருகில், வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் சாலை அருகில், பஞ்சாயத்தில் உள்ள குப்பை கொட்-டப்படுகிறது.
இங்குள்ள கழிவு பொருட்களை சாப்பிடுவதற்காக, தெரு நாய்கள் கூட்டமாக சாலையோரத்தில் சுற்றி திரிந்து வருகிறது.சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை, சில நேரங்களில் நாய்கள் துரத்தி வருவதால், தடுமாறி விழுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.