/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிந்தலவாடி பஞ்சாயத்தில் தெரு விளக்கு பராமரிப்பு
/
சிந்தலவாடி பஞ்சாயத்தில் தெரு விளக்கு பராமரிப்பு
ADDED : செப் 09, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், சிந்தலவாடி பஞ்சாயத்து வார்டுகளில், தெரு விளக்குகள் பராமரிப்பு பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை, சிந்தலவாடி, ஆண்டியப்பநகர், விட்டுக்கட்டி ஆகிய இடங்களில் தெரு விளக்குகள் பஞ்சாயத்து சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. தெரு விளக்குகள் தற்போது மழை காரணமாக விட்டு விட்டு எரிந்து வருகிறது.
இதனால் இரவு நேரங்களில் மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், பஞ்சாயத்து சார்பில் பழுது ஏற்பட்டுள்ள தெரு விளக்குகள் மாற்றப்பட்டு, பராமரிப்பு பணிகள் செய்து புதிய தெரு விளக்குகள் பொருத்தும் பணிகள் நடந்தன.