ADDED : மார் 14, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் அருகே நெரூரில், புகழ்பெற்ற சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது.
இந்த இடத்துக்கு நாள்தோறும் பக்தர்கள் சென்று வருகின்றனர். அதிஷ்டானத்துக்கு செல்லும் சாலைகள், அதிக வளைவுகளை கொண்ட தாக உள்ளது. சாலையின் குறுக்கே, காவிரியாற்றின் கிளை வாய்க்கால்களும் செல்கிறது. மேலும், அந்த வழியாக லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் செல்கிறது. ஆனால், சாலையில் முக்கிய பகுதிகளில் தெரு விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் வளைவுகள் கொண்ட பகுதியில் டூவிலர்களில் செல்பவர்களால் எளிதாக செல்ல முடியவில்லை. நெரூர் சாலையில் தெருவிளக்குள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

