ADDED : ஏப் 04, 2026 04:54 AM
அ நிறம் | அளவு
குளித்தலை, குளித்தலை நகராட்சி பகுதிகளில், இயங்கி வரும் இறைச்சி கடைகளின் கழிவுகளை வியாபாரிகள் சாக்கு மூட்டையில் நிரப்பி, நகராட்சி பழைய குப்பை கிடங்கின் சாலையோரத்தில் வீசுகின்றனர்.சுற்றித்திரியும் நாய்கள், இறைச்சி கழிவுகளை உணவாக சாப்பிட்டு விட்டு, மீதமுள்ளவை சிதறி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
இறைச்சி கடைக்காரர்கள் தேவையில்லாத கழிவுகளை, சாலை ஓரங்களில் கொட்டுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
