ADDED : மார் 28, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
குளித்தலை; குளித்தலை அடுத்த நெய்தலுார் பஞ்.. கட்டாணி-மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பாக, மாணவர்களை சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி நடந்தது.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அனுசுயா தொடங்கி வைத்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரேவதி முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியர் சித்ரா வரவேற்றார். தொடக்-கப்பள்ளியில் இருந்து முக்கிய வீதிகள், நங்க-வரம் காவல்காரன்பட்டி மெயின் ரோடு வழியாக சென்ற பேரணி, மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.
