/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாயை கல்லால் தாக்க முயன்றமாணவருக்கு கட்டையால் அடி
/
நாயை கல்லால் தாக்க முயன்றமாணவருக்கு கட்டையால் அடி
ADDED : ஜூலை 17, 2025 01:42 AM
கரூர், கரூர் அருகே, நாயை கல்லால் அடிக்க முயற்சி செய்த கல்லுாரி மாணவனை, உருட்டு கட்டையால் அடித்த கணவன், மனைவி மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுவன். கரூர் அரசு கலை கல்லுாரியில், பி.காம்., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 8ல் தன் தாயுடன், சமத்துவபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, நாய் குரைத்ததால், கல்லால் தாக்கி விரட்ட முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நாய் வளர்ப்பாளர் ராஜா, அவரது மனைவி விமலா ஆகியோர், சிறுவனை உருட்டு கட்டையால் தாக்கி உள்ளனர். தடுக்க சென்ற சிறுவனின் தாயையும் அடித்துள்ளனர்.
இதுகுறித்து புகார்படி, வெள்ளியணை போலீசார் ராஜா, விமலா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.