தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கல்லுாரியில் வாந்தி எடுத்த மாணவன் உயிரிழப்பு

கல்லுாரியில் வாந்தி எடுத்த மாணவன் உயிரிழப்பு

கல்லுாரியில் வாந்தி எடுத்த மாணவன் உயிரிழப்பு


ADDED : பிப் 17, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை; மாயனுார் அருகே, கல்லுாரியில் படித்து வந்த மாணவன், பூச்சி மருந்து குடித்ததால், வாந்தி எடுத்து உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், ஒடுகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாபு, 49, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் வாசுதேவன், 18, காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 'இஇஇ' முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 14ம் தேதி காலை, 9:30 மணியளவில் கல்லுாரியில் இருந்தபோது, வாசுதேவன் வாந்தி எடுத்தார். அவரை கல்லுாரி விரிவுரையாளர், கரூர் தனியார் மருத்துவம-னையில் சிகிச்சைக்கு அனுமதித்தார்.தகவல் அறிந்து வந்த வாசுதேவனின் தந்தை பாபு, மகனிடம் விசாரித்தபோது, 'தனக்கு படிப்பு வராததால், வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்ததாக' கூறினார். இதையடுத்து, வாசுதே-வனை மேல் சிகிச்சைக்காக கடந்த, 15ல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னையில் அனுமதித்த நிலையில், வாசுதேவன் இறந்தார்.

இதுகுறித்து மாணவன் தந்தை பாபு கொடுத்த புகார்படி, மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us