மாணவியிடம் பாலியல் சீண்டல் கூலி தொழிலாளிக்கு காப்பு
மாணவியிடம் பாலியல் சீண்டல் கூலி தொழிலாளிக்கு காப்பு
ADDED : செப் 19, 2026 05:16 AM
அ நிறம் | அளவு
குளித்தலை;மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
குளித்தலை
அடுத்த கடவூரை சேர்ந்த விதவை பெண், தனது மாமியார், 18 வயது மகளுடன்
வசித்து வருகிறார். கடந்த, 16ம் தேதி மாலை 6:45 மணியளவில் தாயார்,
மாமியார் வெளியே சென்ற போது. திருச்சி மாவட்டம், மணப்பாறை
இனாம்புதுவாடி கல்லுப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜெகதீசன்,
24, உரல் கல் விற்பனை செய்வது போல், வீட்டிற்குள் புகுந்து குடிக்க
தண்ணீர் கேட்டுள்ளார். பின்னர் அத்துமீறி மாணவியிடம் பாலியல் சீண்டல்
செய்துள்ளார். இது குறித்து தனது தாயிடம், மகள் நடந்ததை கூறி உள்ளார்.
இதுகுறித்துசிந்தாமணிபட்டி போலீசார் விசாரணை நடத்தி,ஜெகதீசனை கைது செய்தனர்.
