தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'கரூர் அஞ்சல் கோட்டத்தில் மாணவர்கள் பயோ மெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கலாம்'

'கரூர் அஞ்சல் கோட்டத்தில் மாணவர்கள் பயோ மெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கலாம்'

'கரூர் அஞ்சல் கோட்டத்தில் மாணவர்கள் பயோ மெட்ரிக் விபரங்களை புதுப்பிக்கலாம்'


ADDED : செப் 26, 2026 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 07:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் அஞ்சல் கோட்டத்தில், மாணவர்கள், பயோ மெட்ரிக் விபரங்களை புதுப்பித்து கொள்ள ஆதார் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரூர் அஞ்சல் கோட்டத்தில், 33 ஆதார் சேவை மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. அதில், காலாண்டு பள்ளி தொடர் விடுமுறையையொட்டி, மாணவர்கள் பயோ மெட்ரிக் விபரங்களை புதுப்பித்து கொள்ளலாம். இந்த சேவை கரூர் மற்றும் குளித்தலை தலைமை தபால் நிலையங்களில் காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை ஞாயிறு உள்பட, அனைத்து நாட் களிலும் செயல்படுகிறது. ஐந்து மற்றும் 15 வயது நிரம்பியவர்களுக்கு கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பித்தலுக்கு கட்டணம் இல்லை.

பள்ளி, கல்லுாரிகளில் ஆதார் முகாம் நடத்த அஞ்சல் ஆய்வாளர் மனோஜ் என்பவரை, 70101-48941 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, பொது மக்கள் ஆதார் தொடர்பான சேவைகளுக்கு, அஞ்சலக சேவை மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு,

அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us