தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆபத்தை உணராமல் நெடுஞ்சாலையை கடக்கும் மாணவர்கள்

ஆபத்தை உணராமல் நெடுஞ்சாலையை கடக்கும் மாணவர்கள்

ஆபத்தை உணராமல் நெடுஞ்சாலையை கடக்கும் மாணவர்கள்


ADDED : நவ 12, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2026 07:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே மணல்மேடு பகுதியில், ஆபத்தை உணராமல் அரசு பள்ளி மாணவர்கள தேசிய நெடுஞ்சாலையை கடக்கின்றனர்.

அரவக்குறிச்சி அருகே மணல்மேடு பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளதால், அங்கு பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

பெரும்பாலான மாணவர்கள், தேசிய நெடுஞ்சாலையின் மறுபுறம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்கள் தினமும் காலை பள்ளிக்கு செல்லவும், மாலையில் வீடு திரும்பவும் வாகன போக்குவரத்து காணப்படும், நெடுஞ்சாலையை கடக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், சரக்கு வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் அதி வேகத்தில் தொடர்ந்து செல்வதால், சிறிய குழந்தைகள் தனியாக சாலையை கடப்பது உயிருக்கு ஆபத்தான செயலாகவே உள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே, மாணவர்களை பாதுகாப்பாக சாலையை கடக்க உதவுகின்றனர்.

ஆனால், ஆசிரியர்கள் விடுப்பில் இருக்கும் நாட்களிலும் அல்லது பள்ளியில் ஆசிரியர்கள் குறைவாக இருக்கும் நேரங்களிலும், மாணவர்களை பாதுகாப்பாக சாலையைக் கடப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சில நேரங்களில் வாகனங்கள் இடைவிடாமல் வேகமாக செல்வதால், ஆசிரியர்களுக்கே சாலையைக் கடக்க அச்சம் ஏற்படுவதாகவும், மாணவர்களை அழைத்துச் செல்லும் ஒவ்வொரு தருணமும் பதற்றத்துடனேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிறு கவனக்குறைவால் பெரிய விபத்து நிகழும் அபாயம் இருப்பதாக பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

முன்பெல்லாம் அரவக்குறிச்சி போலீசார், அப்பகுதியில் இருந்து மாணவர்களை பாதுகாப்பாக சாலையை கடக்க உதவி உள்ளனர். ஆனால், கடந்த சில காலமாக போலீசாரின் ரோந்து வாகனம் பள்ளி நேரங்களில் வருவதில்லை; இதனால் மீண்டும் பழைய ஆபத்தான நிலை உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், தேசிய நெடுஞ்சாலையில் வேகக் கட்டுப்பாட்டு நடவடிக்கை, எச்சரிக்கை பலகை, பள்ளி பகுதி என்பதை குறிப்பதற்கான ஒளிரும் அறிவிப்பு பலகை, வேகத்தடுப்பு வசதி அல்லது பாதசாரிகள் பாதுகாப்பாக கடந்து செல்லும் ஏற்பாடு போதுமான அளவில் இல்லாததால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே பள்ளி தொடங்கும் காலை நேரத்திலும், பள்ளி முடியும் மாலை நேரத்திலும் அரவக்குறிச்சி காவல் நிலைய ரோந்து வாகனம் நிரந்தரமாக பணியில் அமர்த்த வேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்க ஜீப்ரா கிராசிங், ஒளிரும் எச்சரிக்கை பலகை, வேகக்கட்டுப்பாட்டு வசதி போன்ற நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us