ADDED : ஆக 01, 2024 07:29 AM
குளித்தலை: காவிரி கரையோரம் உள்ளவர்கள், பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும், பொது மக்கள் காவிரி ஆற்றில் குளிக்கக் கூடாது எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. நேற்று மதியம், 3:00 மணியளவில் கலெக்டர் தங்-கவேல் கடம்பன் துறை காவிரி ஆற்று பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, ஆற்று பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்றும், போலீசார், வருவாய், பொது பணித்-துறையினர் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என உத்தர-விட்டார். டி.ஆர்.ஓ., கண்ணன், ஆர்.டி.ஓ., தனலட்சுமி, பொது பணித்துறை டி.எஸ்.ஓ., கோபிகிருஷ்ணன், தாசில்தார் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, கே.பேட்டை, திம்மாச்சிபுரம், வதியம் காவிரி ஆற்று படுகையில் வசித்து வரும் பொது மக்கள் முன்னெச்சரிக்-கையாக இருப்பதற்காக, திம்மாச்சிபுரம் சமுதாய கூடம், குளித்-தலை அண்ணா திருமண மண்டம் தயார் நிலையில் இருப்பதை கலெக்டர் பார்வையிட்டார்.