/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கள்ளப்பள்ளி பஞ்சாயத்து வார்டுகளில்காவிரி நீர் பிரச்னை குறித்து ஆய்வு

ADDED : ஏப் 17, 2025 01:58 AM
கிருஷ்ணராயபுரம்:கள்ளப்பள்ளி பஞ்சாயத்து பகுதியில், குடிநீர் பிரச்னை தொடர்பாக, குளித்தலை சப்-கலெக்டர் நேரில் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து பகுதியில், காவிரி நீர் சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் கொண்டு வந்து லாலாப்பேட்டை, சந்தைப்பேட்டை அருகில் உள்ள குடிநீர் தொட்டியில் ஏற்றி, மக்களுக்கு வினியோகம் செய்யப்
படுகிறது. தற்போது காவிரி ஆற்றில் அடிக்கடி மின்மோட்டார் பழுது காரணமாக, சில நாட்களாக காவிரி நீர் பிரச்னை நிலவி வருகிறது.
இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., ஒன்றிய செயலாளர் ராஜவேல் தலைமையில், பொது மக்கள் குளித்தலை சப்-கலெக்டரிடம் குடிநீர் பிரச்னை குறித்து புகார் தெரிவித்தனர்.
அதன்படி நேற்று காலை, கள்ளப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருப்பத்துார் பகுதியில் சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ ஆய்வு செய்தார்.