/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழையால் மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து திடீர் அதிகரிப்பு
/
மழையால் மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து திடீர் அதிகரிப்பு
மழையால் மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து திடீர் அதிகரிப்பு
மழையால் மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து திடீர் அதிகரிப்பு
ADDED : நவ 07, 2024 05:47 AM
கரூர்: மழை காரணமாக, மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து நேற்று அதிகரித்தது.மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே உள்ள மாயனுார் கதவணைக்கு குறை-வான கன அடி தண்ணீரே வந்தது. இந்நிலையில் கடந்த, 2 முதல் காவிரியாற்று பகுதிகளில் மழை பெய்து வருவதால், மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது.
மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 12 ஆயி-ரத்து, 791 கன அடி தண்ணீர் வந்தது. மழை காரணமாக நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 14 ஆயிரத்து, 717 கன அடியாக அதிகரித்தது. அதில், 13 ஆயிரத்து, 497 கன அடி தண்ணீர் டெல்டா பாசன பகுதிக்காக, காவிரி-யாற்றில் திறக்கப்பட்டது. கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால்களில், 1,220 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.அமராவதி அணைதிருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 642 கன அடி தண்ணீர் வந்-தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 477 கன அடியாக குறைந்தது. 90 அடி கொண்ட அமரா-வதி அணையின் நீர்மட்டம், 87.18 அடியாக இருந்தது.ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார் வாழி ஆத்துப்பா-ளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினா-டிக்கு, 20 கன அடி தண்ணீர் வந்தது. 29.44 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 24.79 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.