ADDED : ஏப் 13, 2026 12:58 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூர் தொகுதி, தி.மு.க., வேட்பாளர் பங்குதாரராக உள்ள ஜவுளி நிறுவனத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.
கரூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் தியாகராஜன், 65, போட்டியிடுகிறார். இவர், பங்குதாரராக உள்ள, 'ஆசீ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம்' கரூர் - ஈரோடு சாலை, ஆத்துார் பிரிவில் செயல்படுகிறது.
அதில், நேற்று மாலை, 5:30 மணிக்கு, மூன்று கார்களில் வந்த, 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிறுவனத்தில் இருந்து, தியாகராஜனின், தேர்தல் செலவுக்கு பணம் செல்வதாக, வருமான வரித்துறையினருக்கு புகார் சென்றது. அதனடிப்படையில் சோதனை நடப்பதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
