ADDED : மே 25, 2026 02:35 AM
கரூர்:கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று இரவு, குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
கோடைகாலத்தில்
அக்னி நட்சத்திரம், கடந்த, 4 ல் தொடங்கியது. வரும், 28ல் நிறைவு
பெறுகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு, அதிகபட்சமாக கோடை
வெயில், 108 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது. நடப்பாண்டு மழை பெய்ய
தொடங்கியதால், கோடை வெயில் கடந்த, 15 நாட்களில், 106.9 டிகிரி
பாரன்ஹீட்டை தாண்டவில்லை.
நேற்று காலை முதல், கரூர் மற்றும் சுற்று
வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டமாக இருந்தது. ஆனால்,
க.பரமத்தியில், 100.4 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இந்நிலையில்,
நேற்று இரவு, 8:00 மணிக்கு கரூர் டவுன் மற்றும் சுற்று வட்டார
பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் சிறிது நேரம் விட்டு விட்டு மழை
பெய்தது. இதனால், அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தில், அவதிப்பட்டு
வந்த பொதுமக்கள் சற்று ஆறுதலடைந்தனர்.
