/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளியணை பள்ளி அருகில் மோசமான சாலையால் அவதி
/
வெள்ளியணை பள்ளி அருகில் மோசமான சாலையால் அவதி
ADDED : ஜூலை 01, 2025 12:59 AM
கரூர், வெள்ளியணை பள்ளி அருகில் உள்ள, சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளியணையில் அரசு மேல்
நிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளிகள் உள்ளன. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.பள்ளி எதிரில் போலீஸ் ஸ்டேஷன், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.
இங்குள்ள சாலை சேதமடைந்து, பல மாதங்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. குண்டும், குழியுமாக உள்ள சாலையில், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
மழை பெய்யும்போது, சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகனங்கள் செல்ல லாயக்கற்றதாக மாறி வருகிறது. சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.